கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலி அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது பாதிப்பு நிலைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து நிவாரண பணிகளை முன்னெடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment