நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தால் சாதாரண மரக்கறிகளின் விலை மிகவும் உச்சம் தொட்டதால் சாதாரண மக்களால் இதனை தாக்குப்பிடிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாரம்பரிய காய் கறி கொள்வனவை பலர் கைவிட்டு பலாக்காய், ஈரப்பலாக்காய் , வட்டக்காய்(சுரக்காய்) ,மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றையே மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
இன்னும் சிலர் வள்ளல்,வல்லாரை, பொன்னாங்காணி, நாட்டுக்கீரை, பசளி, குப்பை மேனி போன்ற சாதாரண கீரை வகைகளை அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
இதனால் ஆங்கில மரக்கறிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் அக்கறை செலுத்தாததினால் சந்தைகளில் வியாபாரிகள் பெரும் நஸ்டத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment