நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி, வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகள் திறந்து விடப்பட்ட மையால் அம்பாறை மாவட்ட பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலைகளை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இந்த வாரம் முழுவதும் நேரடியாக கள விஜயம் செய்து ஆராய்ந்ததுடன் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ஒலுவில், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வெள்ள நிலைகளையும் நேரடியாக பார்வையிட்டதுடன் ஒலுவில் பிரதேச மக்களுக்கான சமைத்து உணவு வழங்கும் ஏற்பாடுகளை ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் ஊடாகவும், அட்டாளைச்சேனை மக்களுக்கான சமைத்து உணவு வழங்கும் ஏற்பாடுகளை அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு ஊடாகவும் முன்னெடுத்தார்.
மேலும், அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களை சந்தித்து இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதில் உள்ள நெருக்கடி நிலைகள், நிவாரண உதவி வழங்குதல், வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைத்தல், போக்குவரத்தில் மாற்று ஒழுங்குகளை செய்தல் போன்ற பல்வேறு விடயங்களை ஆராய்ந்த அவர் துரிதகதியில் நிவாரண பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை அம்பாறை மாவட்டத்திற்கு அவசரமாக வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment