பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தேசிய கட்டிடங்கள் திணைக்களத்தினால் 20 மில்லியன் ரூபா பெறுமதியான அவசர சேவை பிரிவு கட்டிடத் தொகுதி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு பாவனைக்காக கையளித்ததுடன் சீன செயற்றிட்டத்தின் மூலம் நடைபெறும் கட்டுமான பணிகளையும் குறித்த குழுவினர் பார்வையிட்டனர்
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களும் பிரிவுத்தலைவர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கார்த்திகேயன் அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியாக வளாகத்தினுள்மரங்களும் நட்டு வைக்கப்பட்டன
0 comments :
Post a Comment