அக்கரைப்பற்று ஐ.பி.எச்.எஸ்.கல்வி நிறுவனத்தின் (𝐈𝐏𝐇𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬)ஏற்பாட்டில்,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக,மாபெரும் இரத்ததான முகாம் ஐ.பி.எச்.எஸ்.கல்வி நிறுவனத்தில்(𝐈𝐏𝐇𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬)சனிக்கிழமை (20)இடம்பெற்றது.
குறித்த இரத்ததான நிகழ்வானது ஐ.பி.எச்.எஸ். (𝐈𝐏𝐇𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬)கல்வி நிறுவனத்தின் சமூக நல பங்களிப்பின் அங்கமாக"உயிர் காக்கும் உன்னத சேவையில் ஒன்றிணைவோம்"எனும் தொணிப்பொருளில்,
அக்கரைப்பற்று இன்ஸ்பைரிங்க் யூத்ஸ்(inspiring youths)மற்றும்அக்கரைப்பற்று ஐகோனிக் யூத்ஸ்(iconic youths) அமைப்புக்களின் ஒத்துழைப்புடன்,
ஐ.பி.எச்.எஸ்.கல்வி நிறுவனத்தினால்(𝐈𝐏𝐇𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பொதுமக்கள்,இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் இரத்த தானம் மேற்க்கொள்ள வருகை தந்ததுடன்,சுமார் 90 பேர் வரை இரத்ததானம் அளித்தனர்.அத்துடன் இரத்ததானம் மேற்கொண்டமைக்கான நினைவுச் சான்றிதழ் ஐ.பி.எச்.எஸ்.கல்வி நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. இரத்ததான முகாமுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஐ.பி.எச்.எஸ்.கல்வி நிறுவனத்தினர் (𝐈𝐏𝐇𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬) தனது நன்றியை தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment