ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீலங்கா பென் கிளப் இன் ஏற்பாட்டில் 8 வது சஞ்சிகையான அவரி அவிழ்கை ஓலை
வெளியீட்டு நிகழ்வு பென் கிளப்பின் செயலாளர் முப்லிஹா பிர்தௌஸ் தலைமையில் கடந்த (07.01.2024) சாய்ந்தமருது கமு/ றியாழுல் ஜென்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பென் கிளப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா சுஹுர்தீன் இன் அயராத முயற்சியின் காரணமாக எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் இளம் எழுத்தாளர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கிலும் காலாண்டு சஞ்சிகையாக இச் சஞ்சிகை தொடராக வெளியிடப்பட்டு வருகின்றது.
கவிஞரும் நாவலாசிரியருமான அஸீஸ் எம்.பாயிஸ்,இரண்டாம் விசுவா மித்திரன் ஏ.பீர் முஹம்மது,கலாசார உத்தியோகத்தர் ஏ.எம்.தௌபீக்,அதிபர் எம்.டபிள்யூ.றிப்கா,மற்றும் பென் கிளப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பென் கிளப் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் புதிவு செய்யப்பட்ட சான்றிதழ் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் அவர்களினால் பென் கிளப்பின் தலைவி மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.
இவ் வெளியீட்டு நிகழ்வில் அவரி 8 இன் இரசனைக் குறிப்புகளை
நாவலாசிரியர் தீரன் ஆர்.எம்.நௌஷாத்,சிறப்புரையை
மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் ஸ்ரீலங்கா பென் கிளப்பின் போஷகருமான ஏ.எல்.தௌபீக்,றமீஸ் நிஸா நாட்டார் பாடலொன்றை இயற்றி பாடினார்,
கவிதாயினி ஜெசீனா நிஸ்றின் கவிதை பாடினார்.
நன்றியுரையும் நிகழ்ச்சி தொகுப்பும் முப்லிஹா பிர்தௌஸ் வழங்கியதோடு நிகழ்வு முடிவுற்றது.
0 comments :
Post a Comment