தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையினால் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையும் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது
இவ்விடயம் தொடர்பில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் மற்றும் பிரிவுத்தலைவர்கள் களத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரையும் தொடர்பு கொண்டு கலந்துரையாடினர்
நோயாளர்களின் நலன்கருதி முன்னாயத்த நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டதுடன் டெங்கு மற்றும் ஏனைய தொற்று நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சிகிச்சையளிப்பதில் மாற்று வழிகளை பின்பற்றுமாறும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்கள் பணிப்புரை விடுத்ததுடன் உயிரியல் மருத்துவப் பொறியியலாளரையும் களத்திற்கு அழைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்
0 comments :
Post a Comment