கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொத்துவேலி கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எழுத்தாளரும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளருமாகிய ச.நவநீதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை எண்ணம்போல் வாழ்க்கை இலக்கிய மன்றத் தலைவரும் எழுத்தாளருமான கனக தீபகாந்தனும், நூல்பற்றிய சிறப்பு நயவுரையினை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா இரத்தினசிங்கமும், நூலாசிரியர்பற்றிய உரையினை கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதனும் வழங்கவுள்ளனர்.
இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, முதலமைச்சு, வீதி அபிவிருத்தி அமைச்சு போன்ற அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆளுநர் செயலக செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், மாகாண ஆணையாளர்கள், நிறுவனத் தலைவர்கள், திருமலை வளாக முதல்வர் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment