மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை விரைவுபடுத்தும் வேலைத்திட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



முனீரா அபூபக்கர்-

Ø இந்த வருடம் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம்…

Ø ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழுவொன்று நியமனம்…

Ø ஜனவரி 31 ஆம் திகதிக்குள், மாவட்ட அளவில் முன்மொழிவுகள் சேகரிப்பு பூர்த்தி செய்தல்…

Ø திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 11,250 மில்லியன் ரூபா...

Ø அனைத்து மாவட்டங்களிலும் சமமாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே அரசின் நோக்கம்...

- பிரதமர் தினேஷ் குணவர்தன

Ø அபிவிருத்திக் குழுக்களுக்கு வரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான பணம்...

Ø உள்ளூராட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களும் இதில் சேர்ந்தவை...

Ø கம்பஹா மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் இயங்கி வருகின்றது...


மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை விரைவுபடுத்தும் வேலைத்திட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வையிட பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஹரீன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் மாவட்ட மட்டத்தில் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை நிறைவு செய்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவிக்கும் விசேட கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே உட்பட மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 11,250 மில்லியன் ரூபாவாகும். கொழும்பு மாவட்டத்திற்கு 1,090 மில்லியன் ரூபா, கம்பஹா 1,033, களுத்துறை 574, கண்டி 689, மாத்தளை 287, நுவரெலியா 460, காலி 516, மாத்தறை 402, அம்பாந்தோட்டை 402, யாழ்ப்பாணம் 322, கிளிநொச்சி 80, வவுனியா 115, மன்னார் 115, முல்லைத்தீவு 115, மட்டக்களப்பு 287, அம்பாறை 402, திருகோணமலை 230, குருநாகல் 860, புத்தளம் 459, அனுராதபுரம் 517, பொலன்னறுவை 287, பதுளை 516, மொனராகலை 344, இரத்தினபுரி 631, கேகாலை 517 ஆகும்.

உள்ளூராட்சி மன்ற ஒதுக்கீடுகள், மாகாண சபை ஒதுக்கீடுகள் மற்றும் மத்திய அரசாங்க நிதிகள் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, அனைத்து மாவட்டங்களிலும் சமமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலத்தின் அபிவிருத்தியும் மக்களின் வாழ்வியலும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். எனவே, பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னேற்றுவதற்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதற்கும் அனைவரும் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதில் மேல் மாகாணம் அதிக சுமையை சுமக்க நேரிடும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்திக் குழுக்களுக்கு நிதி ஒதுக்குவதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பணம் கிடைக்காது என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சுமத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களில் கலந்து கொண்டு அபிவிருத்தி முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் மூலம் அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் இயங்காததால், அந்த நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களும் இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றும் என்றார். கம்பஹா மாவட்டத்தில் தற்போது ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :