மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு ! ரிஷாத் , ஹக்கீம் , அதா மௌனம் !! உதவிக்கரம் நீட்ட முன் வாருங்கள். நாபீர் பௌன்டேஷன் அறைகூவல் .



ம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதை கண்டும் கானாமல் பார்த்துக் கொண்டு இருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் - அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட இனியாவது முன்வர வேண்டும்.
இவ்வாறு - நாபீர் நற்பணி மன்ற தலைவரான - பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார்.
முஸ்லிம் சமுகத்தின் வாக்குகளை மாத்திரம் எதிர்பார்க்கும் ரிஷாத் , ஹக்கீம் மற்றும் அதாவுல்லா போன்றோர் - தமக்கு வாக்களித்த அந்த மக்களின் துயரிலும் பங்கேற்க வேண்டும். மாறாக ஓடி ஒழிந்து மௌனம் காக்கக் கூடாது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களும் எமது துயரில் யார் ? யார் ? பங்கு கொள்கிறார்கள் என்பதையும் அவதானிக்க வேண்டும்.

நாபீர் நற்பணி மன்றத்தின் ஊடாக எம்மால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். எமக்கு எந்தவொரு மக்களும் கடந்த காலங்களில் வாக்களிக்கவில்லை. ஆனால் , மனிதாபிமானத்தோடு எமது செயற்பாடு அன்று முதல் இன்று வரை முன்னெடுக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கை விடுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேவை இல்லை. உங்களிடம் இருக்கும் பணமே போதும் இந்த காலநிலை சீரடையும் வரை மக்களுக்கு உதவுவதற்கு. அதைவிடுத்து சொகுசாக இருந்து கொண்டு அறிக்கை விட நீங்கள் எதற்கு என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பும் நிலை இன்று உருவாகியுள்ளது.

கொழும்பில் ஒய்யாரமாக இருப்பதை விடுத்து - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்கள் துயரில் பங்கெடுங்கள். இது உங்களின் கட்டாயக் கடமை. ஏனெனில் , உங்களை நம்பி அந்த மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றிக் கடனாக இதையாவது செய்யுங்கள் என்றும் நாபீர் நற்பணி மன்ற தலைவர் - பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :