எங்கள் அருகில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் நாங்கள் சந்திக்கும் இடங்களில் உள்ள மக்கள் எல்லோரும் கட்சிகளுக்கு அப்பால் கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்களை நேசிப்பதையும், ஆதரித்துப் பேசுவதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. மக்கள் வருங்காலத்தில் நமது சமூகத்தை முன் கொண்டு செல்ல கூடியவராகவும் எஸ்.எம். சபீஸ் அவர்களை பார்க்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.ஆர். அமீர் தெரிவித்தார்.
வெள்ள நிவாரணப்பணி தொடர்பில் மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சபீஸை ஆதரிக்க பல காரணங்களை மக்கள் முன்வைத்தனர். சமூகம் என்று வந்தால் களத்தில் அவரை காணலாம். அனர்த்தம் என்று வந்தால் முதல் உதவி அவருடையதாகத்தான் இருக்கும். பாடசாலை அல்லது மாணவர்கள் என்றால் எஸ்.எம் சபீஸ் அவர்களை அங்கே காணலாம். பள்ளிவாசல் தலைமையின் ஊடாக எவ்வாறு தலைவர்கள் இயங்க வேண்டும் என்பதை காட்டிவிட்டு மற்றவர்களிடம் பதவிகளை ஒப்படைத்தார். சுயநலமற்ற சிந்தனை கூடிய கருத்துக்களால் வாலிபர்களை நன்னோக்கத்தின்பால் அழைத்துக் கொண்டு செல்கிறார் என்று பல விடயங்கள் அடிக்கிக்கொண்டே போகின்றனர்.
20 வருட அரசியல் அனுபவம் பள்ளித் தலைமை ஊடாக இறையில்லங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்று காட்டியமை, மக்களுக்காக வாழுதல், நேர்மை, ஒட்டுமொத்த சமூகமாக மக்கள் முன்னேற வேண்டும் என்ற ஆசை இவைகள் அனைத்தும் மக்கள் மத்தியில் எஸ்.எம். சபீஸ் மீதான நம்பிக்கையை வேர் ஊன்ட வைத்துள்ளது. கட்சிகள் தாண்டியும் இவருக்கு மக்கள் எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க காத்திருக்கின்றனர் என்றார்.
0 comments :
Post a Comment