மாணவர்களை வழி நடத்துவது தொடர்பில் ஹாப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை விடுகை விழாவில் எஸ்.எம்.சபீஸ் கருத்துரைப்பு !



நூருல் ஹுதா உமர்-
பாலமுனை கொலிஜ் ஒப் ஹாப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழாவும், பரிசளிப்பு வைபகமும் பாலர் பாடசாலை பணிப்பாளர் றிஸ்மியா ஹானின் தலைமையில் அட்டாளைச்சேனை ஷக்கி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

பாலர் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற வருடாந்த விடுகை விழாவும், பரிசளிப்பு வைபகமுமான இந்நிகழ்வில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குழந்தைகளின் உளவியல், தலைவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டிய அவசியம், இன்றைய சமூக நீரோட்டத்தில் குழந்தை வளர்ப்பின் சவால்கள், பெற்றோர்களின் அவசர கால வேளைகளில் குழந்தைகள் பாதிக்கப்படும் விதம் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மேலும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் அதிபர் எஸ்.எம். எம். ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.பி.பதுறுதீன், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் கலாநிதி அபூசாலி ரசீது, ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களை வாழ்த்தி பாடசாலைகளுக்கு வழியனுப்பி வைத்த இந்நிகழ்வில் நினைவுப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :