கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் செங்கலடி மற்றும் கரடியனாறு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலைய வருடாந்த பிரதேச மட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு செங்கலடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் வெகு விமரிசையாக (24) நடைபெற்றது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் கலந்து கொண்டார்.
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் மாவட்ட சிரேஷ்ட தையல் போதனாசிரியை, இதன் உறுப்பினர்கள் என பலரும்
கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment