பாதிக்கப்பட்ட , பராமரிப்பற்ற, கைவிடப்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம் சிறுமிகள்,பெண்கள் மற்றும் வயோதிப பெண்களை பராமரித்து வரும் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் புதிதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெற்ற திருமதி ஜஸ்ரினா ஜுரேக்கா முரளிதரன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (21) காப்பகத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி திருமதி சல்மா ஹம்ஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, நகர சபை செயலாளர் எம்.ஆர்.எப்.ரிப்கா ஷபீன், பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் , அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் ரீ.எம்.எம்.அன்சார் (நளீமி) மற்றும் காப்பகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள திருமதி ஜே.ஜே.முரளிதரன் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன். மாவட்ட செயலாளரிடம் காப்பகத்தின் பணிப்பாளர் சபையினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment