வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறை மாவட்டம் : மக்களின் தேவைகளை தீர்க்க களமிறங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்



நூருல் ஹுதா உமர்-
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் அம்பாறை மாவட்ட பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலைகளை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் இன்றும், நேற்றும் நேரடியாக கள விஜயம் செய்து ஆராய்ந்ததுடன் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களை சந்தித்து இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதில் உள்ள நெருக்கடி நிலைகள், நிவாரண உதவி வழங்குதல், வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைத்தல், போக்குவரத்தில் மாற்று ஒழுங்குகளை செய்தல் போன்ற பல்வேறு விடயங்களை ஆராய்ந்த அவர் துரிதகதியில் நிவாரண பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை அம்பாறை மாவட்டத்திற்கு அவசரமாக வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் இறக்காமம், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேச செயலக ஊர்களுக்கும் களவிஜயம் செய்து மக்களை சந்தித்து தேவைகள் தொடர்பிலும், வெள்ள அனர்த்த நிலைகள் தொடர்பிலும் கண்டறிந்து அவற்றை தீர்க்கும் விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். நீர்ப்பாசன பொறியியலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை செய்ய பணித்தார்.

இந்த விஜயங்களில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கிராம நிலதாரிகள், பிரதேச செயலகங்கள் அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யேக செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :