காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்



எம். எச். எம் .அன்வர்-
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் 18.01.2024 காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழுவின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா பா.உ தலைமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ உதய சிரீதர் அவர்களின் ஒருங்கிணைப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில்
உதவிப்பிரதேச செயலாளர் எம் .எஸ் சில்மியா ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள மற்றும் சபைத் தலைவர்கள் பொலிஸ் அதிகாரிகள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீனவர் சங்க உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ .எல். எம். என். முபீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன செயலாளர் ஏ .எல் .எம். சபீல் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி எல்லைப்பிரதேச கடலில் மீன்பிடி வலை பாவிப்பது தொடர்பாகவும், சட்ட விரோத கட்டடங்களை தோணா வடிகான்களில் கட்டியுள்ளமை தொடர்பாகவும், காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்திற்கான வகுப்பறைக்கட்டடம் அமைத்தல், அஸ்வசும பயனாளிகளுக்கும் நீர்க்கட்டணத்தை மாணிய அடிப்படையில் அறவிட பரிந்துரைத்தல் தொடர்பாகவும் கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் இக்கூட்டத்தின்போது ஆராயப்பட்டன.

காத்தான்குடி ஊர்வீதியூடாக இடைநிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸினை சேவையில் ஈடுபடுத்தல், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான கட்டட பற்றாக்குறை, MOH கட்டட பகுதிவேலைகள், போதை வஸ்த்து பாவனை தடுத்தல், கடற்கரை மெரைன்ரைவ் வீதியை பூநொச்சி முனை வரை காபட் வீதியாக அமைத்தல், காத்தான்குடி பிரதேசத்தில் primary teachers பற்றாக்குறை, அஹதிய்யா வகுப்புக்கள் நடாத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக காத்தான்குடி பிரதேசத்தில் அனேக வீடுகள் நீரில் மூழ்கியமை தொடர்பாகவும் இதற்கான முக்கிய காரணம் தோணா வடிகால் சீர்செய்யப்பட வேண்டியமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :