அறிவு சமர் போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.



நூருல் ஹுதா உமர்-
மது 75 வது ஆண்டில் காலடியெடுத்து வைத்திருக்கின்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், அறிவுச் சமர் கலை மன்றத்துடன் இணைந்து நடாத்திய கல்முனை வலய 1AB சூப்பர் தர தேசிய பாடசாலைகளுக்கிடையிலான "அறிவுச் சமர் சீசன் II" போட்டி நிகழ்ச்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை, 26. டிசம்பர், 2023 கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

றியோ மார்க்கட்டிங் நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெற்ற இப்போட்டிகளில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை, மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மற்றும் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி ஆகியன போட்டியில் பங்குபற்றின.

இப்போட்டி நிகழ்ச்சி புள்ளிகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆகியன இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.
நேற்று (07) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்ற அறிவுச் சமர் இறுதிப்போட்டியில் கல்முனை சாஹிறாக் கல்லூரி 250 புள்ளிகளையும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 2400 புள்ளிகள் பெற்று 2150 மேலதிக புள்ளிகள் வித்தியாசத்தில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சம்பியன் பட்டத்தை பெற்று வெற்றிவாகை சூடியது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :