அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் அம்பாரை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம அவர்களை இன்று மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மாவட்ட பாதிப்பு நிலைகளை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து துரிதகதியில் நிவாரண பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி செயலாளர் சமன் எக்கநாயக்கவை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை அம்பாரை மாவட்டத்திற்கு அவசரமாக வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment