அரச உத்தியோகத்தர்களுக்கு எடுத்துக்காட்டான ஒன்றுகூடல் நிகழ்வு!



அபு அலா -
டந்த 2008 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாண திட்டமிடல் செயலக பிரதிப் பிரதம செயலாளராக கடமையாற்றிய வி.மகேந்திரராஜாவின் தலைமைத்துவம் மற்றும் வழிநடாத்தலின் கீழ், பணியாற்றிய உத்தியோகத்தர்களின் குடும்ப ஒன்றுகூடல் கடந்த (20) ஆம் திகதி திருகோணமலை J7 வில்லா தனியார் விடுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கிழக்கு மாகாண திட்டமிடல் செயலக மாகாண திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எ.எம்.முனாசிர் மற்றும் எஸ்.எம்.மரின்டன் ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வில், குறித்த காலப்பகுதியில் மாகாண திட்டமிடல் செயலகத்தில் பணியாற்றிய 56 அனைத்துத்தர உத்தியோகத்தர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பொதுவாக அலுவலக ஊழியர்களின் ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வுகள் அலுவலகங்களில் ஒழுங்கு செய்யப்பட்டாலும், குறித்த உத்தியோகத்தர்கள் அந்த அலுவலகத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்ற சிறிது காலத்திலேயே அந்த இடத்தையும், அவர்கள் செய்த பணிகள் மற்றும் தலைமை அதிகாரியாக கடமையாற்றியவரையும் மறந்துபோகும் இக்காலப்பகுதியில், இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றமை எல்லா அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்று 6 வருடங்களின் பின்னர், கிழக்கு மாகாண திட்டமிடல் செயலக பிரதிப் பிரதம செயலாளராக கடமையாற்றிய முன்னாள் வி.மகேந்திரராஜாவினால் இந்த ஒன்றுகூடலுக்கான அழைப்பு விடுத்தவுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசித்துவரும் அனைத்துத்தர உத்தியோகத்தர்களும், அவர்களின் குடும்பங்களும் கலந்து கொண்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் அவரின் நேர்மையையும், உண்மைத்தன்மையையும், ஒரு கட்டுக்கோப்பான நிருவாகத் திறமை மற்றும் கட்டுப்பாட்டு, இறுக்கமான அணுகுமுறை, எல்லோரையும் சமமாக மதித்து நடக்கும் பண்புகள், இதய சுத்தியுடன் ஊழியர்களின் நலன் தொடர்பில் அக்கறையாக செயற்பட்ட விதம் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை இந்த ஒன்றுகூடல் நிகழ்வு சுட்டிக்காட்டி நிற்பதையும், அவரின் சிறந்த வழிநடாதல்களையும் இது எடுத்துக் காட்டுகின்றது என்பதற்கு இதுவொரு சான்றாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு அலுவலகத்தில் முன்னாள் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் பல வருடங்கள் கழிந்த நிலையில், அதே உணர்வோடு மீண்டும் ஒன்றுகூடல் என்பதும், அதற்கு அவர்களின் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு வழங்குவது என்பதும் நிச்சயம் இது ஒரு சாதனை நிகழ்வாகவே எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வின்போது பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்குமான பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதும் அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :