அஸ்ஹர் இப்றாஹிம்-
தொடர்ச்சியாக பெய்யும் அடை மழையினாலும், இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திர வான் கதவு திறப்பினாலும் சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராம மக்கள் சிறு குழந்தைகளோடும், வயோதிபர்களோடும், வலது குறைந்தோருடனும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்தின் பின் புறமாகவும், கரைவாகு ஆற்றினால் முன் புறமாகவும் பரவும் வெள்ள நீர் முழுக் கிராமத்ததையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது .
கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல முடியாத நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள இம்மக்கள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தினால் உயிர்கள், உடமைகள் ,குடியிருப்பு மற்றும் தொழில்களை இழந்து வெறும் கையோடு இக் குடியேற்ற கிராமத்தில் குடியேறிய மக்களாகும்.
.மீன்பிடி , விவசாயம் என்பவற்றோடு நாளாந்தம் கூலித் தொழில் செய்து தமது குடும்ப வருமானத்தை பெற்றுக் கொள்ளும் இம் மக்கள் இவ் வெள்ள நிலமையில் தொழிலின்றி இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலையான ஒரு நிலமையாகும்.
0 comments :
Post a Comment