புலம்பெயர் தேசத்திலிருந்து பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்ற சமத்துவ மக்கள் நல ஒன்றியம், அஹிம்சா நிறுவனத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட வந்தாறுமூலை மேற்கு பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பமொன்றுக்கு வீடொன்றை வழங்கியுள்ளது.
இவ் வீடு மட்டக்களப்பு அஹிம்சா நிறுவனத்தின் வீடமைப்பு திட்டத்தின் 71 வது வீடாகும்.
தமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் பணிப்பாளர், தமூகபற்றாளன் விஜியகுமாரன்,குபேரலெட்சுமி விஜிய குமாரன் ஆகியோரால் வீடு கையளிக்கப்படும் நிகழ்வில் உதவி கல்விப் பணிப்பாளர் எம்.லக்குணம், வந்தாறுமூலை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன், அஹிம்சா நிலைய தலைவர் வீ.விஜயராஜா உட்பட சமூக மேம்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment