ராணி சீதரனின் "கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா!



அபு அலா -
ன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணி சீதரனின் "கடவுள்தான் அனுப்பினாரா” என்ற நூல் அறிமுக விழா நாளை சனிக்கிழமை (20) மாலை 3.45 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி
சுபாசினி சித்திரவேலு, இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் க.பிரபாகரன், Ben Holding Pvt Ltd, LYCA Group நிதிக் கணக்காளர் தயாளலிங்கம் பிரசாதனன் ஆகியோரும்
கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

நூலின் அறிமுகம் மற்றும் நயவுரையை எழுத்தாளர் தில்லைநாதன் பவித்திரனும், நன்றியுரையை அன்பின் பாதை றொசில்டா அன்டன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :