மறைந்த பிரபல நடிகரும் தமிழ் உணர்வாளருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்திற்கு காரைதீவில் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவுக்கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு பொது நூலக மண்டபத்தில் இடம்பெற உள்ளது .
தாயகமக்களின் கதாநாயகனும் ஈழ தேசத்தின் விடுதலைக்காக அளப்பெரிய சேவைகளை வழங்கிய கொடை வள்ளலுமான விஜயகாந்த் அவர்களுடைய ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று ஏற்பாட்டாளர் முன்னாள் தவிசாளர்
கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment