தகவல் தொழில்நுட்ப துறையில் இணைய தளங்களை உருவாக்கும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியொன்றை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அண்மையில் நடாத்தியது.
இரண்டு சுற்றுக்களாக நடாத்திய இப் போட்டியில் நாடு தளுவிய ரீதியில் 125 பாடசாலைகள் பங்கேற்றன.
இரண்டாம் சுற்றுக்கு கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக பெண்கள் கல்லூரி, குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி, ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி, மிஹிந்தலே மத்திய கல்லூரி ஆகிய தெரிவு செய்யப்பட்டிருந்தன.
தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டது.
வெற்றியீட்டிய மாணவர்களையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
0 comments :
Post a Comment