முஷாரப் எம்பியின் முயற்சியில் மேலும் 1000 குடும்பங்களுக்கான நீர் இணைப்பு! வசதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு!!



பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழுத் தலைவரும், சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் முயற்சியில் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினூடாக பொத்துவில் பிரதேசத்திற்கு மேலும் 1000 குடும்பங்களுக்கான நீர் இணைப்பினை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (13.02.2024) நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொத்துவில் காரியாலய பொறுப்பதிகாரி அஸீஸ் அவர்களின் தலைமையில் ஹெட ஓயா,நீர் உள்ளீர்ப்பு உந்து நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டதோடு பொத்துவில் பிரதேச செயலாளர்,நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் யு.கே.எம். முஷாஜித், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியலாளர்கள்,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளை தலைவர்,அனைத்துப் பள்ளிவசால்கள் அமைப்பின் தலைவர்,பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மூவின மதத்தலைவர்கள்,கமக்கார அமைப்பின் தலைவர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :