இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா நாளை ஒலுவில் வளாகத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையிலும் இடம்பெறவுள்ள இருநாட்களைக் கொண்ட நிகழ்வுகளில் 1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும் 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகளுக்கு இந்த பட்டமளிப்பு விழாவின் போது பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
பட்டமளிப்பு விழாவின் நேரடியாக ஒலி ஒளிபரப்பு பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட https://www.seu.ac.lk/conv24/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக ஒலி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது விஷேட அம்ஷமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment