ஷைல் பெஸ்ட் ஆங்கில கல்லூரியின்; 19 ஆவது வருட பட்டமளிப்பு விழாவும்! கலை நிகழ்ச்சியும்!!



பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருதமுனை ஷைல் பெஸ்ட் ஆங்கில கல்லூரியின் (CHILD FIRST ENGLISH COLLEGE) 19 ஆவது வருட பட்டமளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் கல்லுரியின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில பிரிவின் முன்னாள் துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் தலைமையில் 2024.02.04 ஆம் திகதி மருதமுனை அல் மானார் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

மாணவர்களின் ஆடல் பாடல் மற்றும் உரையாடல்கள் என களைகட்டிய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படை பிரிவின் கட்டளைத்தளபதி மெஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் நிகழ்வுகளை கண்டுகளித்து மானர்களையும் பாடசாலையையும் பாராட்டி உரையாற்றிச் சென்றார்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். முஹமட் பைரோஸ் அவர்களும் கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.றியாஷா அவர்களும் அல் மானார் மத்திய கல்லூரியின் அதிபர் ஐ. உபைத்துல்லாஹ் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் அவர்களும் கலந்து கொண்டதுடன் பெற்றோர்கள் சார்பில் கௌரவ அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ் செய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் அவர்களும் சறோ பாம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எச்.எம். தாஜுடீன் அவர்களும் கண்டி தேசிய வைத்தியசாலையின் டொக்டர் ஏ.ஏ.எம். புகைம் அவர்களும் கல்னிவ வைத்தியசாலையின் டொக்டர் எம்.எச்.எம்.நளீfப் அவர்களும் ஹார்டி தொழில்நுட்ப கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளர் எம்.எஸ்.எம். மின்ஹாஜ் கான் அவர்களும் பவர் பொய்ன்ட் சேர்விஸ் சென்டரின் உரிமையாளர் இசட். சிராஜ் முனீர் அவர்களும் எஸால் ஹேன்ட் கிராப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எப்.எம். பாமி அவர்களும் கலந்து கொண்டனர்.

பாடசாலை நிர்வாகத்தால் கௌரவமாக அழைக்கப்பட்டவர்கள் பெற்றோர்கள் மாணர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மண்டபம் நிறைந்திருந்தது.

மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் சான்றிதல்கள் மற்றும் பரிசில்கள் என வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இங்கு மெஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிரி அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது விசேட அம்ஷமாகும்.





























































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :