கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் 2024ம் கல்வி ஆண்டுக்கான புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான ஏடு தொடக்க விழா இன்று பாடசாலை பகுதி தலைவர் டி.கே .எம். மௌஸீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம் றிசாத் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை சபா கோல்ட் ஹவுஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஃப். எம். சகி, "டே நைட் "பென்சி ஹவுஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ. எம். சிறாஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தரம் இரண்டு மாணவர்களினால் புதிய மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளால் புதிய மாணவர்களுக்கும் கிரீடம் அணிவித்தும், இனிப்பு பொதிகளும் வழங்கி, ஏடு தொடக்கி வைத்துக் கௌரவிக்கப்பட்டனர். மேலும் வருகை தந்த கௌரவ அதிதிகளினால் புதிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பாடசாலையின் பிரதியதிபர் எம்.ரீ.ஏ. மனாப், பாடசாலையின் பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment