ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவித்த புலமை விழா
காத்தான்குடியில் கடந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் புலமை விழா காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 735 மாணவர்கள் பாராட்டப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு பரிசில்கள் நினைவுச் சின்னம் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதுடன் அதற்காக உழைத்த ஆசிரியர்கள் அதிபர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் ஏ.எம்.அலியார் ரியாதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆங்கில மொழித்துறை தலைவருமான கலாநிதி பெளசுல் கரீமா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஹாரூன் றஷாதி உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment