76 வது சுதந்திர தினத்தில் 76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு. காரைதீவு பிரதேச செயலாளரின் முன்மாதிரி!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றபோது 76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலகத்தில் சிவில் ஓய்வூதியம் பெறும் இவ் வருடம் 76 வயதை பூர்த்திசெய்த ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு காரைதீவு பிரதேச செயலகத்தில் நீண்டகாலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் சிலரும் அவரது வீடுகளுக்கு சென்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இது தவிர அரசின் "சுவதரணி" வேலை இத்திட்டத்தின் கீழ் மூலிகை கன்றுகள் பல ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் நடப்பட்டதுடன் பல பயனதரும் மரங்கள் பிரதேசத்தில் நடப்பட்டன.

சுதந்திரதினத்தையொட்டி கடற்கரை சுத்தப்படுத்தல் சிரமதானமொன்று கடந்த வெள்ளியன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :