இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(4) நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல் , சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் , நிர்வாக கிராம சேவை.உத்தியோகத்தர் ,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரின் பிரதான உரையையடுத்து மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகையும் நடைபெற்றது.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் அரச தனியார் நிறுவனங்களின் முன்னால் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment