இலங்கையின் 76 இவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூரில் நிகழ்வு!



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
றாவூர் 01 கிராம உத்தியோகத்தரின் தலைமையிலான பசுமையான பூமியின் மீது உயிருள்ள செடியொன்றினை நட்டுவிப்போம். எனும் தொனிப்பொருளிலாலான 76 ஆவது சுதந்திர தின நிகழ்வும், தலைமைத்துவப் பயிற்சிக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளலும் எனும் நிகழ்வானது ஏறாவூர் மட்/மம/ பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் அவர்களும், ஏனைய அதிதிகளாக, உதவிப் பிரதேச செயலாளர் , அல்ஹாஜ் AC அகமட் அப்கர் அவர்களும், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ஜாஹிதா ஜலால்தீன் அவர்களும், பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் MM ஜலால்தீன் அவர்களும்,ஏறாவூர் ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாபிழ் AL ஸாஜித் ஹுஸைன் (பாகவி) அவர்களும் , புத்தளம் பொது சமூக சேவைகள் அமைப்பின் தேசிய தலைவர் மௌலவி தாஹிர் ஹம்ஸார் அவர்களும் ஏறாவூர் நகர பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் SAC நஜிமுதீன் அவர்களும் ஓய்வு பெற்ற ஏறாவூர் மத்தி வலயக் கல்விப்பணிமனையின் முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் MHM நஸீர் அவர்களும், பிரிவின் பொதுசுகாதார பரிசோதகர் MIM பஸ்மி அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் HM இர்பான், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி: AG நஜீமா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது மரநடுகையுடன், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒழுக்கமிக்க மாணவர் சமுதாயத்தினைக் கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்ற என்பதும் குறிப்பிடத்தக்கது.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :