இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வுகள் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் S.M.A அஸீஸ் அவர்களின் தலைமையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் இன்றையதினம் (4) நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் J. லியாகத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்ததுடன் பள்ளிவாயல் தலைவருடன் இணைந்து பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றினையும் நாட்டிவைத்தனர். மேலும் நாட்டினது சுபீட்சம் நல்லாசி வேண்டி கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் கண்ணியத்துக்குரிய மெளலவி A.C.M. முஹ்யித்தீன் மன்பயினால் விஷேட துஆ பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கண்ணியத்துக்குரிய உலமாக்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment