பசுமையான நாளையை நோக்கிய ஒரு சிறந்த முன்னேற்றத்திற்காக, Adani Green Energy (Sri Lanka) Limited அதன் 355 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய முக்கிய திட்டமான, இலங்கையின் அழகிய வட மாகாணத்தின், 234MW பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டத்திற்கு, இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) தனது அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த முக்கிய திட்டமானது, இலங்கையின் மிகப்பெரிய ஒரே அமைவிடத்தில் அமையும் காற்றாலை மின்சக்தி திட்டமாக அமைவதோடு மட்டுமல்லாமல், மின்சக்தி நெருக்கடி, பொருளாதார, சூழல் நிலைபேறான தன்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான புதிய சகாப்தத்தை நோக்கியதாக அமையவுள்ளது.
இந்த 355 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய, 234MW, பூநகரிரி காற்றாலை மின்சக்தி திட்டமானது, Adani Green Energy நிறுவனத்தின், நிலைபேறான தீர்வுகளை வழங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைகிறது. இந்த மகத்தான திட்டமானது, ஒரே இடத்தில் அமையப் பெறும் இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின்சக்தி திட்டமாக, அதன் அந்தஸ்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், வலுசக்தி பாதுகாப்பு, பொருளாதார மறுசீரமைப்பு, சூழல் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்கின்ற, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அமைகிறது.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மேம்படுத்தி, காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல்:
பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டமானது, இப்பிராந்தியத்தில் நிலைபேறான வலுசக்தியின் முக்கிய புள்ளியாக மாற உள்ளது. 234MW திறன் கொண்ட இத்திட்டம், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனுக்கு பாரிய பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது. காற்றாலை மின்சக்தியானது, தூய்மையான மற்றும் பசுமையான பண்புகளை கொண்டது என்பதால், காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் இந்தத் திட்டம் ஒத்துப் போகின்றது. இந்த திட்டத்தில், சூழலைப் பாதுகாப்பதில் Adani Green Energy கொண்டுள்ள அர்ப்பணிப்பு தெளிவாகத் தென்படுகிறது. இது தூய்மையான மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.
புதுப்பிக்கத்தக்க வலு சக்தி மூலம் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வு:
மின்சக்தி நெருக்கடியுடன் இலங்கை போராடி வருகிறது, வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மையின் சவால்களை அது எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில் பூநகரி திட்டமானது, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கவுள்ளது, நாட்டின் மின்சக்தி பிரச்சினைகளுக்கு நம்பகமானதும், புதுப்பிக்கத்தக்க வகையிலானதுமான தீர்வை அது வழங்கவுள்ளது. காற்றின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த திட்டம் இலங்கையின் மின்சக்தி உற்பத்தியை பல்வகைத் தன்மை கொண்டதாக மாற்றவும், கனிய எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஏற்ற இறக்கத்தைக் கொண்ட எரிபொருட்களின் விலைகள் மற்றும் விநியோக பற்றாக்குறை தொடர்பான அபாயங்களைக் குறைக்கவும் உறுதியளிக்கிறது.
சமனிலையற்ற பொருளாதாரத்தை மீட்க வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) அதிகரித்தல்:
பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 355 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கூடிய பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டமானது, இலங்கையில் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது. இந்த மாற்றமுறும் திட்டத்தில் Adani Green Energy நிறுவனத்தின் துணிகரமான முதலீடானது, இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) கொண்டு வருவதோடு மாத்திரமல்லாமல், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தியையும் எடுத்துக் கூறுகின்றது. இந்த மூலதன முதலீடானது, பொருளாதார வளர்ச்சியைத் ஊக்குவிப்பதற்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்துவதற்கும், பொருளாதார பிரச்சினைக்கு பின்னரான வலுவான மற்றும் மீளெழுச்சியுடனான மீட்சிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தவுமுள்ளது.
தொழில்வாய்ப்பு மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்:
பூநகரி காற்றாலை மின்சக்தித் திட்டமானது குறிப்பாக வட மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த திட்டத்தின் கட்டுமானம், செயற்பாடு, பராமரிப்பு ஆகியன அதிகளவான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு, இது இப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கும். வட மாகாணம் தொடர்பான இந்த மூலோபாய ரீதியான உற்றுநோக்குதலானது, உள்ளூர் மக்களிடையே சமூக ரீதியானதும், அவர்களை வலுவூட்டும் வகையிலானதுமான உணர்வை ஏற்படுத்தி, உள்ளீர்த்தல் தொடர்பில் Adani Green Energy கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
சூழலைப் பாதுகாப்பதற்கான பொறுப்பிற்கு வழி காட்டுதல்:
பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை, பூநகரி காற்றாலை மின்சக்தித் திட்டம் முழுமையாக உள்ளடக்கியுள்ளது. காற்றின் எல்லையற்ற சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கையின் காபன் வௌியீட்டை கணிசமாகக் குறைத்து, தூய, பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சூழல் பற்றிய கரிசனை கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம், சூழல் பாதிப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மின்சக்தி தொழிற்துறையில் பொறுப்பான மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கான உயர் தரத்தை Adani Green Energy அமைக்கிறது. மின்சக்தி உற்பத்தியில் நிலைபேறான நடைமுறைகளை ஒருங்கிணைத்து, இயற்கையின் வளங்களைப் பாதுகாப்பதற்கும் எமது சூழல் தொகுதிகளின் நுணுக்கமான சமநிலையைப் பாதுகாப்பதற்குமான உலகளாவிய முயற்சிகளுடன் இது ஒத்துப்போகிறது.
பூநகரி காற்றாலை மின்சக்தி திட்டமானது, ஒரு மின்னுற்பத்தி நிலையம் என்பதைக் கடந்து, நம்பிக்கை, முன்னேற்றம், சாத்தியத் தன்மையின் ஒரு சின்னமாக விளங்குகின்றது. வட மாகாணத்தின் கம்பீரமான நிலப்பரப்புகளின் பின்னணியில் இது தோற்றம் பெறுவதால், ஒளிமயமான, நிலைபேறான எதிர்காலத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பின் கலங்கரை விளக்கமாக அது நிமிர்ந்து நிற்கும். Adani Green Energy நிறுவனத்தின் வழிநடத்தலை கொண்ட ஒரு திட்டமானது, பசுமையான நாளையை நோக்கிய பயணத்தில் இதை விட ஒரு நம்பிக்கைக்குரியதாக அமைய வாய்ப்பில்லை.
ENDS
0 comments :
Post a Comment