ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மன்னார் முசலி, பொற்கேணி தொடக்கம் அளக்கட்டு வரையான 3 கிலோ மீற்றர் கார்பட் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் நிலமைகளைப் பார்வையிட்டார்.
இராஜாங்க அமைச்சருடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் , உத்தியோஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதியானது ஒரு சில வாரங்களில் உத்தியோபூர்வமாக மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது .
0 comments :
Post a Comment