ஈரான் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பஹ்மான் மொஅஸாமி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் ரோயல் டெக்னோலஜி கெம்பஸ் தலைவர் அனஸ், ரோயல் டெக்னோலஜி கெம்பஸ் பணிப்பாளர் அரூஸ் சலீம், ஈரான் இஸ்லாமிய குடியரசின் கலாச்சார மையத்தின் செயலாளர் ஆஸம் மற்றும் ரோயல் டெக்னோலஜி கெம்பஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கதீஜா ரமீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஈரான் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பஹ்மான் மொஅஸாமி, இலங்கையில் வாழும் சகல மாணவர்களுக்கும் ஈரானில் பட்டப்படிப்பை தொடர்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருக்கின்றது. பல்கலைக்கழக வாய்ப்பை இழந்து உயர்கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்கி தர உள்ளதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறே விசேட துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் திறனின் அடிப்படையில் உதவித்தொகை வழங்க ஈரானின் எச்சந்தர்ப்பதிலும் உறுதியுடன் செயற்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ரோயல் டெக்னோலஜிகல் கெம்பஸின் தலைவர் யு.எல்.எம். அனஸ் கருத்து தெரிவிக்கையில், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு பல தசாப்தங்களை கொண்டது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈரானின் பங்களிப்பானது உலகம் தரத்தில் முன்னணியில் இருக்கின்றது. அவ்வாறே, தொழில்நுட்ப கல்வியில் ஈரான் முன்னிலையில் இருக்கும் நாடாகவும் குறிப்பாக ஏஐ (யுஐ) மற்றும் நெனோ தொழில்நுட்பம் போன்ற அதிநவீன துறைகளில் அபிவிருத்தி அடைந்த நாடாகவும் ஈரான் காணப்படுகிறது.
ரோயல் டெக்னோலஜிகல் கெம்பஸ் மற்றும் ஈரானியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையில், கல்விக் கண்காட்சி ஒரு முக்கிய சான்றாக இருக்கின்றது. இவ்வாறான நிகழ்வு எமது கல்வி வளர்ச்சிக்கு பாரிய உந்துதலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.
சர்வதேச ரீதியில் பரந்து காணப்படும் தொழிற்சந்தைக்கு ஏற்றவாறான கல்வியை எமது மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க இதனை சாதகமாக மாற்ற வேண்டியுள்ளது. எமது மாணவர்களிடம் காணப்படும் அறிவு, நுட்பம் போன்றவற்றை உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச மாணவர்களுக்கு இணையாக போட்டியிட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டுமெனவும் கூறினார்.
ஈரான் பல்கலைக்கழக கூட்டு முயற்சியானது, உலகத் தலைவர்களின் எதிர்கால சந்ததியினருக்கான கல்வி வளர்ச்சியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. குறிப்பாக இளம் சமுதாயத்தினரின் கல்விக்கான வசதிகளை மேம்படுத்த எடுத்துள்ள இந்த முயற்சியானது பாராட்டுக்குரியது எனவும் அறிவு மற்றும் சிந்தனை பரிமாற்றத்தின் மூலம் கலாச்சார புரிதலை வளர்ப்பதில் இரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஒரு சான்றாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
0 comments :
Post a Comment