கழுகமுவ மத்திய கல்லூரி சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற மாணவிகளுக்கு கெளரவம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
த்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதன் முறையாக
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றாடல் முன்னோடி இணைப்பாட விதான செயற் திட்டத்தில் ஜனாதிபதி பதக்கத்தை முதல் முறையாக வென்று கெலிஓய ,கழுகமுவ மத்திய கல்லூரி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கெலிஓய, கழுகமுவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையான கழுகமுவ மத்திய கல்லூரி மாணவிகளான ஏ.எம்.மரியம் லீனா ,எம்.என் .நூருல் ஹிக்மா, எம்.ஏ.எப். பர்ஹா, பீ.எப்.சஹாமா, எம்.எஸ்.சல்மா, எம்.எஸ்.எப்.சஹானா ஆகியோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வின்று பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.அனஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கம்பளை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் பஸ்லான் பாறூக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பஸ்லான் பாறூக் பெளண்டேசன் ஊடாக பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :