ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் "சுத்தமான சூழலை நோக்கி" எனும் தொனிப் பொருளில் மாபெரும் சிரமதான பணி கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (17) சனிக்கிழமை காலை 06 மணிக்கு இடம்பெற்றது.
ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீனின் தலைமையில்
இடம்பெற்ற இச்சிரமதான பணியில் அமைப்பின் முகாமையாளர் டாக்டர் எஸ்.நளிமுதீன் ஆகியோருடன் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச்சிரமதானத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
கல்முனை மாநகர சபை சுகாதர பிரிவினர், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உட்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழு உறுப்பினர்களின் பங்குபட்டுதலுடன் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிரமதான பணியினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பொது இடங்களை சுத்தமுள்ள சுகாதாரமிக்க சுத்தமான காற்றை சுவாசிக்கக் கூடிய இடமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஏ.ஆர் மன்சூர் பவுண்டேஷன் ஈடுபட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது.
0 comments :
Post a Comment