சாய்ந்தமருதின் பிரபல மருதூர் கலைக்குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்மருதமாமணி பட்டம் பெற்றவர்- ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்,முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் , ஓய்வு இல்லாத இலக்கியச்செயற்பாட்டாளர்-- கிழக்கின் குறும்பா இலக்கியத்தின் முன்னோடி-- சிறுகதை-கவிதை-விமர்சனம்- போன்ற எல்லாத் தளங்களிலும் இயங்கிவருபவர்-- இரண்டாம் விஸ்வாமித்திரன் என்ற புனைபெயரில் இலக்கியஉலகில் நடமாடுபவர். கலாபூஷணம்விருதுபெற்றவர்-- எஸ்.பொ.விடம் எழுத்து பயின்றவர்-- கவர்ச்சிமிக்க மேடைப்பேச்சாளர்-- கவிஞர்-
விபுலானந்த அடிகளும் முஸ்லிம்களும்- திறனாய்வு - போன்ற 12 நூல்களின் ஆசிரியர் - திறனாய்வு துறையில் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர்-- அபாபீல்கள் கவிதா வட்டத்தின் தலைமை ஆலோசகர்-
பலருக்கு எழுத்தும் இலக்கியமும் கற்பித்தவர் அதிசயக்கலவையானவர்- ஏ. பீர்முஹம்மது எனும் நல்லாசிரியர் -- அவர்களின் புதிய சிறுகதைத் தொகுப்பான தைலாப்பொட்டி சிறுகதைத் தொகுப்பு நூல் ஓய்வுபெற்ற தபாலதிபரும் எழுத்தாளரும் கவிஞருமான ஆர்.எம்.நெளஸாத் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
0 comments :
Post a Comment