இன்று 4 .4 பில்லியன் கையிருப்பு டொலரைப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு எங்களால் உழைக்க முடிந்துள்ளது .
டொலர்களை வங்கிகள் மூலம் அனுப்ப விளம்பரம் செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டோம் .இது நிதியமைச்சின் வேலை என விட்டு ஒதுக்காமல் விளம்பரத்தை நாம் கையாண்டோம்.
விளம்பரங்களை விளம்பரப்படுத்த எம்மிடம் பணம் இல்லை எனவே நண்பர்களின் பணத்தில் விளம்பரத்தை செய்து நாட்டிற்குள் பணத்தை கொண்டு வருவதற்காக நாம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தினோம்.
அந்த வகையில்,சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது.எங்களால் வெற்றிகொள்ள முடியாது என நினைத்த காரியமே இதுவாகும்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் "என்னிலிருந்து ஆரம்பித்து இலங்கையை வெற்றி கொள்வோம்" மக்கள் நடமாடும் சேவை நிகழ்வுத்தட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று (01) அனுராதபுர சல்காது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்த தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஷ நாணயக்காரர மேற்கண்டவாறு கூறினார் .
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
இயற்பியலில் ஒரு விமானம் புறப்பட்டால், விமானத்தின் சமனான நீளம் கொண்ட இறக்கைகள் இருக்க வேண்டும்.நீங்கள் பார்க்கும் இந்த பம்பரத்தேனீ தனது சிறிய இறக்கைகளால் எவ்வாறு தனது உடலை உயர்த்திப் பறக்கிறது என்று பார்க்கின்றீர்கள். இது வாழ விரும்புவதால் மிக வேகமாக இறக்கைகளை மடக்கி பறந்து சென்று உணவு தேடி வாழ்கிறது.
எனவே இலக்கை நோக்கிச் செல்ல வேண்டுமானால், தியாகம் செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனது அமைச்சின் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாலும் வெளிநாட்டு தொழிலாளிகளின் உதவியினாலும் இன்று நாம் வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஆனால் இவற்றை இயற்பியல் என்று நினைத்து செயற்பட்டம் உயிர் வாழமுடியாது .எனவே இந்த பழமைவாத மனநிலையில் இருந்துகொண்டால், நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்காது. இவற்றை அணுசரித்துச் செல்லாவிட்டால் நாம் அழிந்து போகும் மக்கள் இனமாகிவிடுவோம்
உங்களுக்கு ஏற்ற வேலையைப் பெற்று நீங்கள் தொழிலதிபராக வேண்டும் என்றால் நீங்கள் தொழில்முறை கல்வியைப் பெற வேண்டும். எம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
சிலர் தன பெற்றோர்கள் ஏழை என்பதால் படிக்கவில்லை என சொல்ல முற்படுகிறார்கள் மாற்றத்தை அடைந்து கொள்ளவேண்டும் என்ற தேவைப்பாடு இருக்குமானால் மாற்றத்தை எம்மால் ஏற்படுத்த முடியும்
நாம் இந்தியப் பெருங்கடலின் முத்து என்கின்றோம் ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏன் அந்த பெரிய நாடு இந்தியப் பெருங்கடல் என்று பெயர் பெற்றது? எமது நாடு அபிவிருத்தியடைந்து இருந்தால் நம் நாட்டின் பெயரால் இந்தக் கடலைப் பிரிக்க முடியாதா? அப்படி ஒரு விஷயத்தை நாம் எண்ணவில்லை . நாங்கள் செய்தது, நமக்குக் கிடைத்த இடத்தை, விழுந்த இடத்தை ஏற்றுக்கொள்வதுதான். உலகம் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டோம்.
அப்படிச் சிந்திக்கக் கூட எங்களுக்கு அனுமதி இல்லை. அப்படிச் சிந்திக்கக் கூட அனுமதிக்காத கட்டமைப்பிற்குள் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம்.
இந்த கட்டமைப்பை இல்லாதொழிப்பதே இப்போது தேவை. 1956 ல் முதலில் வசப்பட்டோம் சுருங்கச் கூறின் , யாரோ வந்து நான் புத்தனாக மாறிவிட்டேன், தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்லும் சூழ்நிலையில் இருக்கிறோம்.
எளிமையாகச் சொல்வதானால், நாமும் மலட்டுப் கொத்துவில் சிக்கிக் கொண்டோம். நாம் ஒரு கனவை உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் அனைவரும் வழிதவறி விட்டனர் . எனவே அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும்.
அப்போதுதான் நாம் உலகை வெல்ல முடியும். நாட்டை வெல்ல வேண்டுமானால், அதற்கு நம் நாட்டு இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்.
விருப்பத்தின்படி பயிற்சித் திட்டங்களை தெரிவு செய்து ஜனாதிபதி நிதியில் இருந்து பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி என்னிடம் கூறியுள்ளார். இதன்படி ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் இளைஞர், யுவதிகள் தொழில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என ஜனாதிபதி என்னிடம் கூறினார். 2048க்கு போக பழகிக் கொள்ள வேண்டும்.நாம் ஒரேயடியாக வெற்றிகொள்ள முடியாது.
அது ஒழுக்கமாக இருக்க வேண்டும். வேலை செய்ய நமக்கு சக்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால், சக்தி இல்லாமல் உழைக்க முடியும் என்று காட்டினேன். அதனால் சக்தி இல்லாமல் வேலை செய்ய முடியும்.
அதற்கு தேவையானது ஒரு குறிக்கோளும் அர்ப்பணிப்பும் மட்டுமே.
எனக்கு நிறம் கட்சி வேறுபாடுகள் இல்லை நாடு வெற்றியடைய வேண்டும். அதற்கான சரியான இடத்தை இன்று தேர்ந்தெடுத்துள்ளேன்.
இதன் விளைவாக, என்னால் இளம் தொழில் அமைச்சராக வர முடிந்தது.
இதற்கு தேவையாக இருந்தது இலக்கை நோக்கி முன்நோக்கி செல்வது மாத்திரமே.
முழுமையான மனிதனாக மாறி, சுதந்திர மனிதனாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.
0 comments :
Post a Comment