தென்கிழக்கு, களனி பல்கலைக்கழகங்களிடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு!



ல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ்; களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் (Drone Technology) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு, இன்று 2024.02.14 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது.
பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமைவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வின்போது களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் புவியல்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி அவர்களும் பேராசிரியர் ஏ.ஜி. அமரசிங்க அவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், கலாநிதி றபீகா அமீர்டீன் , சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், விரிவுரையாளர் ஐ.எல். முகம்மட் சாஹிர், விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப், விரிவுரையாளர் எம்.என். நுஸ்கா பானு, விரிவுரையாளர் எம். எச். பாத்திமா நுஸ்கியா உள்ளிட்டவர்களும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர் அவர்களும் கல்விசார உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன.
ட்ரோன் தொழில்நுட்பம் (Drone Technology) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு விரிவான செயல்முறை பயிற்சிகளையும் விரிவுரைகளையும் ஆற்றினர்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வருகையை மகிழ்விக்க தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

ஊடக பிரிவு
தென்கிழக்கு பலகலைக்கழகம்.























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :