நற்பிட்டிமுனை RKR சமூக சேவை அமைப்பின் பணிப்பாளர் எச்.எம்.தில்ஷாத் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபாவினால் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு 12 மின்விசிறிகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் தலைவருமாகிய அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர் கனி , ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்..றஊப்தீன், அல் ஹாஜ் எம்.ஐ.ஏ.அஸீஸ் உட்பட பள்ளிவாசல் நிருவாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஜமாஅத்தினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment