மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் யூ.எல். தாவூத் புதிய பாடசாலை ஆரம்பம்.



உமர் அறபாத் - ஏறாவூர்-
றாவூர் பிரதேசத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிரிவில் மட்/மம/யூ.எல் தாவூத் வித்தியாலய அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (01) வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர் சியாஹூல் ஹக் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான கௌரவ செய்யத் அலிஸாஹிர் மௌலானா அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம் அமீர்,

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் அல்ஹாஜ் எம்.எஸ்.பஸீர், மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எச்.எம் றமீஸ், ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நளீம், ஏறாவூர் நகரசபையின் விசேட ஆணையாளர் எம்.எச்.எம் ஹமீம், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் வீ.பற்குணன், ஏறாவூர் பல நோக்கு கூட்டுரவு சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ லத்தீப் பாடசாலையின் அதிபர் திருமதி பர்ஹான், உட்பட பாடசாலை அதிபர்கள், தாவூத் அதிபர் அவர்களின் குடும்பத்தினர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், சமூகமட்ட நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

வருகைதந்த அதிதிகளினால் பாடசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதோடு பாடசாலையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு மாணவச் செல்வங்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது

மேலும் இப்பாடசாலை உருவாக்கத்திற்காக அயராது பாடுபட்டவர்களுக்கு
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாடசாலையானது நாளை முதல் ஏறாவூர் பிரதேசத்தில் முதலாம் ஆண்டு பாடசாலையாக செயற்படவுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தில் கல்வி மறுமலர்ச்சிக்காக அயறாது பாடுபட்ட UL தாவூத் அவர்களின் பெயர் இப்பாடசாலைக்கு சூட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக ஒருமைப்பாட்டிற்கான ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :