கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளை கையளித்தார்!
திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 இலட்சம் மற்றும் 10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கபட்டன.
அதன் முதல் கட்டமாக மூன்று வீடுகள் கடந்த புதன்கிழமை பிரதேச செயலாளர்.த.கஜேந்திரன் தலைமையில் அவரின் அழைப்பின் பெயரில் நேற்றைய முன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டி. வீரசிங்க ஆகியோர் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மூன்று வீடுகளையும் பயனாளிகளுக்கு கையளித்தார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா நிர்வாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment