76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்லிதரின் இளைஞர் கழகம் நடாத்திய பாயிஸ் ஞாபகார்த்த கரப்பந்து சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பாயிஸ் அறக்கட்டளையின் தலைவருமான மொஹமட் பஹத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment