சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம் : மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளிப்பு !



டந்த சுனாமிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலையில் உள்ள குறைநிறைகளை பாடசாலை நிர்வாகத்திடம் ஆராய்ந்ததுடன், மாணவர்களிடம் கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என்.எம்.ஏ. மலிக், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரின் பொதுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :