“உலகம் முழுவதும் எங்கள் கதைகள்” சிறுகதைத் தொகுதி வெளியீடு!



லங்கை ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான SRI LANKA PEN CLUB இன் மூன்றாவது வெளியீடாக, "உலகம் முழுவதும் எங்கள் கதைகள்." சிறுகதைத் தொகுதி, கடந்த 24.02.2024 சனிக்கிழமை காலை10 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

SRI LANKA PEN CLUB ன் ஸ்தாபகத் தலைவர், இலக்கிய வித்தகர் சம்மாந்துறை மஷூறா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் அவிழ்கை விழாவில், அவுஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள் கவுன்சில் அமைப்பின் தலைவியும், ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷனின் ஸதாபகத் தலைவியுமான, "கிழக்கின் மகள்" சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுதீன், அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

SLPC அங்கத்தவர்களின் பதினைந்து சிறுகதைகளை அதன் தலைவி சம்மாந்துறை மஷூறா தொகுத்திருந்தார். இத் தொகுதியி்னை ஏ. ஆர் மன்சூர் பவுண்டேஷன் வெளியீடு செய்திருந்தது.

இவ்விழாவை SLPC இணைப்பாளர் கல்முனை நபீஸா எம். மபாஸ் கிராஅத் ஓதி ஆரம்பிக்க, வரவேற்புரையை ஏறாவூர் என் எம். ஆரிபா (SLPC) நிகழ்த்தினார்.

நூல் திறன் நோக்கினை ஓய்வுநிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர், கலாபூஷணம் ஏ. பீர்முகம்மட் நிகழ்த்தினார்.

நூல் ரசனைக் குறிப்பினை திருமலை மர்ளியா சக்காப் அவர்களும், ஏற்புரையினை திருமலை ஐனுன் கதீஜா அன்சார் அவர்களும் சிறப்புரையினை ஏ. ஆர் மன்சூர் பவுண்டேஷன் பணிப்பாளர் டாக்ட்டர் எஸ் நஜிமுதீன் அவர்களும் நிகழ்த்தினர்.

முதற் பிரதியினை சாய்ந்தமருது சிங்கர் ஷோரூம் உரிமையாளர் எம். ஏ. எம். ஜிப்ரி பெற்றுக் கொண்டார்.

கலாபூஷணம் ஏ பீர்முகம்மட் அவர்களின் திறன் நோக்கு உரை சபையை ஈர்த்திருந்தது.

"2018 ம் ஆண்டிற்கு பிறகு வெளிவரும் பெண்களின் சிறுகதைத் தொகுதி இதுவாகும். ஒரு சிறுகதையின் தரமும் கணிப்பும், ஒரு கதையின் கரு, அதன் உத்தி முறை, வடிவம், பாத்திர வார்ப்பு, புனைவு மொழி, தொடக்கமும் முடிவும் எனப் பல உட்கூறுகளிலே தங்கியிருக்கிறது.

இதனை மனதிற் கொண்டு, பதினைந்து சிறுகதைகளையும் வாசித்தேன்.மனத் திருப்தி தருகிறது என ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறேன்" என்றார்.

பிரதம அதிதி மர்யம் மன்சூர் நளீமுதீன் தனதுரையில், "உலகளாவிய ரீதியில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு திருப்தியாயிருக்கிறது. இத்தொகுதியிலுள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்தேன். ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கும்போது எனக்குத் தெரிந்த பல முகங்கள் வந்து போயின.அனைத்து பெண்களின் புன்னகைகளின் பின்னாலும், ஒரு சோகக் கதை இருக்கிறது. அந்த சோகத்தைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி இருப்பதென்பதுதான் மிகப்பெரிய குற்றமாகும். அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொண்டு, இந்த பென்கிளப் பெண்கள், ஒவ்வொரு சோகத்தைப் பிரதிபலித்து முன்வைக்கின்றனர்". என்றார்.

தொடர்ந்தும் "கிழக்கின் மகள்" சட்டத்தரணி மர்யம் மன்சூர், SLPC அமைப்பினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷன் இணைப்பாளர் மிப்றாஸ் மன்சூர் மற்றும் கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜிஹானா ஆலிப் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் ம.வி அதிபர் வி.எம். ஸம் ஸம், அஸ்ஸூஹறா அதிபர் மஜீதியா என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் பிறை வானொலி அறிவிப்பாளருமான ரம்ஸானா ஸமீல் நிகழ்ச்சியைத் திறம்பட தொகுத்து வழங்கினார்.

சாய்ந்தமருது ஜெஸீனா நிஸ்றீன் (SLPC) அவர்களின் நன்றியுரையுடன் நூல் வெளியீடு நிறைவு பெற்றது.


























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :