இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை, மருதமுனை கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஹைதர்(ஜே.பி) ஏற்பாட்டில் நிலையப்பொறுப்பதிகாரியும் தலைவருமான ஏ.ஜீ.சித்தி பாஜியா தலைமையில் இன்று (04) காலை கலாசார மத்தியநிலையத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது.
இதன் போது கலாசார மத்திய நிலையத்தின் கலாசார அபிவிருத்தி குழுவின் செயலாளரும் கவிஞருமான மூஸா விஜிலி, உப செயலாளரும் கவிதாயினியுமான ஏ.ஆர்.பாத்திமா சூபா,கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அகீலா பாணு,சிரேஷ்ட கவிஞர்களான ஜீனாராஜ்,ஜெசீமா முஜீப்,மாஹிறா மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கலாசார மத்திய நிலையத்தின் வளாக சிரமதானமும் மரநடுகையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment