பொத்துவில் விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட செங்காமம் மற்றும் ரொட்டை ஆகிய பிரதேசங்களில் விவசாய திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வயல் அறுவடை விழா மிகவும் சிறப்பாக (5) இடம்பெற்றது.
உலக உணவு ஸ்தாபனம் (FAO) மற்றும் விவசாய திணைக்களம் ஆகியன இணைந்து "ஒன்றிணைந்த நெல் சாகுபடி ,போசணை முகாமைத்துவம் " எனும் தொனிப்பொருளில் இடம்பெற்று வந்த விவசாய கள பாடசாலையின் இறுதி நிகழ்வான வயல் அறுவடை விழா விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.நர்மதன் தலைமையில் நடைபெற்ற போது விவசாய போதனாசிரியர்களான என்.என்.சித்திரா, எஸ்.எப்.றபீக்கா மற்றும் பிரதேச விவசாயிகள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment