இன நல்லுறவு, மத நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவரும் நாடறிந்த சமூக செயற்பாட்டாளருமான பொஹவந்தலாவ ராகுல ஹிமி தேரர் அவர்கள் கடந்த புதன்கிழமை விஷேட விஜயம் மேற்கொண்டு காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்திருந்தார்.
இவரது வருகையை ஒட்டி விஷேட காலை ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ. நிஹால் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்காலை கூட்டத்தில் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள், தமிழ், முஸ்லிம் மக்களோடு தான் கொண்டுள்ள உறவு, இன,மத நல்லிணக்க பயணத்தில் மாணவர்களின் பங்கு போன்ற விடயங்களை முன்வைத்து அழகிய முறையில் தமிழில் விஷேட உரை நிகழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.
0 comments :
Post a Comment